உலர்திராட்சைப் பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன...?
சிலர் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள்
பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால்
இதயத் துடிப்பு சீராகும்.
பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த
திராட்சையைப் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை வரும்.
அஜீணக் கோளாறு
அஜீணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை
புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில்
கொதிக்க வைத்து கஷாயம் போல் செய்து அருந்தி குடல் புண்கள் குணமாகும்.
ஃபிரெஷ்ஷான திராட்சைப் பழங்களை நன்கு காயவைத்து, உலர்திராட்சை ஆக்குகிறார்கள். நான்கு டன் திராட்சைப் பழங்களை உலரவைத்தால், ஒரு டன் உலர்திராட்சைகள் கிடைக்கும். தண்ணீர் எல்லாம் வற்றிவிடும்
இப்படி உலரவைப்பதன் மூலமாக, இதில் இருந்து நமக்கு
ஏராளமான நார்ச்சத்துக்கள் கிடைக்கும்.
திராட்சையுடன் ஒப்பிடும்போது உலர் திராட்சையில் அதைவிட ஏராளமான சத்துக்களும்
பலன்களும் இருக்கின்றன. உதாரணமாக, 100 கிராம் உலர்திராட்சையில் 299 கலோரிகள் உள்ளன. நாம் ஒரு வேளை சாப்பிடும்
உணவின் அளவில் இருக்கும் கலோரிகளை, 100 கிராம் உலர் திராட்சையைச் சாப்பிட்டாலே பெற முடியும்.
உடல் வெப்பம் தணியும்
வெயில் காலம் தொடங்கிவிட்டால், சிலருக்கு முகத்தில் கொப்புளங்கள் வரும். அவர்கள் இதைச் சாப்பிட்டால், கொப்பளங்கள், கட்டிகள் நீங்கும்; தோல் நோய்களில் இருந்தும் நம்மை காத்துக்கொள்ள முடியும்; முகமும் பொலிவு பெறும்.
இதில் வைட்டமின் ஏ சத்து இருப்பதால், கண்களுக்கு நல்ல பலன்களைத் தரும். கண்ணாடி
அணிந்திருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், பார்வைக்குறைபாடு
நீங்கும்; பார்வைத்திறன் மேம்படும்
சிறுநீரக பாதையில் தொற்று
சிறுநீரக பாதையில் ஏதேனும்
நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதை குணமாக்க ஆயுர்வேதம் பரிந்துரைப்பது
இந்த வழியைத் தான். அது என்னவெனில் இரவில் படுக்கும் போது ஒரு கப் நீரில் 8-10 உலர்
திராட்சையை ஊற வைத்து, மறுநாள்
காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து அதனை உட்கொண்டு வருவது தான்.
கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்
கருப்பு நிற திராட்சையில்
கொலஸ்ட்ரால் இல்லை. எனவே அதனை கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி
உட்கொண்டு வந்தால், உடலில்
தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்
இரத்த சோகை
இரத்த சோகை உள்ளவர்கள், இதனை
தினமும் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வந்தாலோ அல்லது இரவில் படுக்கும் போது நீரில் ஊற
வைத்து, மறுநாள்
காலையில் நீருடன் சேர்த்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தாலோ, இரத்தணுக்களின்
அளவை அதிகரிக்கலாம்.
மலச்சிக்கல்
மலச்சிக்கலே நோய் வருவதற்கான அறிகுறியாகும். வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உடலில் சீராண உறுப்புகள் வலுவிழந்து இருப்பதால் உணவுகள் எளிதில் சீரணம் ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்துகளைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சனை தீராது. இதனால் மூட்டுவலி, இடுப்பு வலி, தலைவலி என பல உபாதைகள் உருவாகும். இந்தப் பிரச்சனைக்கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே.
மாதவிடாய்
பிரச்சனைகள்
பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் பிரச்சனை தீர உலர்
திராட்சை பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக
செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும். எலும்பு
மஜ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது.
எலும்பு பிரச்சனைகள்
எலும்பு பிரச்சனைகள் எலும்பு
சம்பந்தப்பட்ட பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், உலர் திராட்சையை அன்றாடம்
சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் எலும்புகளின் வலிமை மற்றும் ஆரோக்கியத்திற்குத்
தேவையான கால்சியம் வளமாக இருப்பதால், இதனை தினமும் சாப்பிட்டு
வந்தால், ஆஸ்டியோபோரோசிஸ்
ஏற்படுவதைத் தடுக்கலாம்
மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்குப் பின்னர் காலையிலும்.
மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழு நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூலரோகம்
குணமடையும்.
No comments:
Post a Comment